sireku

அதிமேதகு ஜனாதிபதி கோடாபய ராஜபக்‌ஷ அவர்களின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்தவர்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தில் முதல் கட்டம் தெரிவு செய்யப்பட்ட 34,818 பேருக்கு தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில் தலைமைத்துவ பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
அந் நிகழ்ச்சியின் கீழ்  2020.11.13 ஆம் திகதி  தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 21 பேருக்கு  பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் வழங்கும் நிகழ்வாக  "தொழிலுக்கான திறவுகோல்" மற்றும் பொது அறிவு பரீட்சைகள் இடம்பெற்றதுடன் 31 துறைகளில் தெரிவுகள் இடம்பெற்று NAITA நிறுவனத்தின் ஊடாக           NVQ 3 தகைமைக்கான கற்கை நெறிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 



இந்நிகழ்வு பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கான அதிகாரி ஏ.ஏ. முஹ்சித் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெ. ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.



இதில்  இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதி பணிப்பாளர், Smart Sri Lanka மாவட்ட இணைப்பாளர் இஸ்டான்னி, தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L உடகெதர, இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.எம். நியாஸ், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மதுரன் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் நோபல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...