புரவி சூறாவளியினை எதிர் கொள்ள தம்பலகாமம் பிரதேச செயலகம் தயார் நிலையில்.
sireku
இலங்கையினை தாக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள புரவி சூறாவளி கிழங்கு மாகாணதின் ஊடாக கடந்து செல்லவுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது திருகோணமலை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்படவாய்புள்ளது.
இந்நிலையில் தம்பலகாம மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரதேச செயலகத்தில் அனர்த முகாமைத்துவ பாதுகாப்பு நிலையம் 24 மணிநேரமும் இயங்ககூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்படின் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்கும் பாடசாலைகளில் தங்கவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் மக்கள் தங்களது பாதுகாப்பு நிமிர்த்தம் வீடுகளில் இருக்குமாறும் அருகில் உள்ள மரங்கள் தொடர்பாக கூடிய அவதானம் செலுத்துமாறும் வேண்டப்பட்டுள்ளார்கள்.
அவசர நிலைமையின் போது உடன் அழைக்கவேண்டிய 24 மணிநேரம் இயங்கும் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் தொலைபேசி இலக்கம் 0262248037.
0 Comments