கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை

திருகோணமலை – கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் துரிதமாக பரவி வருகின்ற டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ,எம்.அஹமட் லெப்பை தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை கவனத்திற்கொண்டு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கிண்ணியா பிரதேசத்தில் துரிதமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலினால் இந்த வருடத்தில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் (13) மாத்திரம் கர்ப்பிணித்தாய் உள்ளிட்ட நால்வர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர்.

பிரதேசத்தில் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...