sireku



வடகீழ் பருவப் பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய அனர்தத்தை குறைப்பதற்கான முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் இன்று பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் தம்பலகாமம் பிரதேச செயலக  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (2020/11/25).

இதன் போது திடிர் வெல்லம் , புயல் போன்ற அனர்தங்கள் ஏற்படின் மக்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கொரனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைப்பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.


இதில் உதவி பிரதேச செயலாளர் R.பிரசாந்தன்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் I.முஜீப் , மற்றும் சமுர்த்தி முகாமையாளர் R. முஸாமிலா , அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் R.கருணாகரன், இராணுவ உத்தியோகத்தர் மேஜர்  S.R.B.K.U.N கடாடொரி  மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலகத்தின் ஏனைய அதிகாரிகள் , தம்பலகாமம் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டார்கள்.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...