நியமனம் வழங்கப்படாது விடப்பட்ட பட்டதாரிகள் திருகோணமலையில் போராட்டம்.
sireku
(2020-09- 16) ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஏற்பாட்டில் இதுவரை நியமனம் வழங்கப்படாது மீதமுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது
குடும்ப சுமைக்காக தொழில் செய்த எங்களை EPF/JOB மற்றும் JOB போன்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்ட செயல் அநீதியாக கருதுகின்றோம் என நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு 10000 பட்டதாரிகளை உள்வாங்கும் செயற்திட்டத்தை மிக விரைவாக ஆரம்பிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து இவ் அமைதி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இப்போராட்டமானது 22மாவட்டங்களிலும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சஙகம் மற்றும் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
*-திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்-*
*-ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்-*

0 Comments