தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ உறுப்பினர் அல்-ஹாஜ் எச். தாலிப் அலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு  2020.07.20 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது தம்பலகாமம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் அல்-ஹாஜ் எச்.தாலிப் அலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 அல்-ஹாஜ் எச்.தாலிப் அலி அவர்கள் நான்கு தடவைகள் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...