கலாநிதி பட்டம் பெற்றார் முகம்மது அஸீம்.

நிந்தவூரைச் சேர்ந்த ஏ.பி.எம்.அஸீம், வர்த்தக முகாமைத்துவத் துறையில் கலாநிதி  (PhD) பட்டம் பெற்று தனது ஊரான நிந்தவூரிற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 17ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இவரிற்கான கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நிந்தவூர் இமாம் றூமி பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற இவர், உயர்கல்வியை நிந்தவூர் அல் அஷ்றக் தேசியப் பாடசாலையில் பயின்றார். பின்னர் ,MBA- Operational Management ,BBA,PGDP-Marketing  Mgt,PGDP- Export  & Import Mgt,Dip.in.HRM,NCIM,AAT.மேலும் வர்த்தகத்துறையில் கூடுதல் கரிசனை செலுத்திய இவர் இந்தியாவின் கன்பூர் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ கற்கைநெறியினைப் பயின்று தற்போது அந்த துறையிலேயே கலாநிதிப்பட்டத்தினையும் பெற்றுள்ளார்,

இவர் மர்ஹூம்களான நிந்தவூர் 3 யை சேர்ந்த மரைக்கார் ஆதம்பாவா மற்றும் அலியார் பாத்தும்மா ஆகியோரின் 11 வது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தம்பலகாம இளைஞர்கள் பலருக்கு தொழில் வழங்கியுள்ள  தொழிற்சாலை ஒன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் செயற்படும் இவரை  தம்பலகாமம் சார்பாக சிறகு வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.


 நஸீர்கான்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...