sireku
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக எதிர் வரும் தம்பலகமம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உங்கள் முன் வந்திருக்கின்றோம். எங்களைப் பொருத்தமட்டில் ஏனைய அரசியல் வாதிகளைப் போன்று உங்களை ஏமாற்றுகின்ற அரசியலை செய்ய நாங்கள் உங்கள் முன்வர வில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் எங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை உங்களுக்காக பயன்படுத்தும் சிறந்ததோர் அரசியலை செய்வதற்காக முன்வந்துள்ளோம். இதற்கு எமது (NFGG) பூரண வழிகாட்டலையும் ஒத்துழைப்பையும் வழங்கும்.

கீழ்வரும் விடயங்களில் நாம் உடன்பட்டுள்ளோம்,

# முன்னுரிமை வழங்கப்பட்ட வேட்பாளர் யாரும் எம்மில் இல்லை.

# கட்சியின் வெற்றிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் உழைப்போம்.

# பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களுடன் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்துவோம்.

# சபையால் வழங்கப்படும் சம்பளத்தைப் பெறமாட்டோம்.

# அதனை மக்களுக்காகவே செலவழிப்போம்.

# கொந்தராத்து வேலைகளை செய்து பணம் பெறமாட்டோம்.

# அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டோம்.

# நீங்கள் வழங்கும் அதிகாரத்தை சொந்தமாக்கிக்கொள்ள மாட்டோம்.

# சுழற்சிமுறையில் அனைத்து வட்டாரங்களுக்கும் எமது சேவை தொடரும்.

எனவே, வருட காலமாக பல கட்சிகளுக்கு வாக்களித்து ஏமாற்றப்பட்ட நாம் இனியும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக இரட்டைக் கொடி சின்னத்தில் உங்கள் முன் வந்திருக்கின்றோம். எமது பிரதேசத்தில் புதியதொரு அரசியலை செய்துகாட்ட உங்கள் மூலமாக அதிகாரத்தை எங்களுக்கு வழங்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தம்பலகமம் பிரதேச சபை வேட்பாளர்கள்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG).
தம்பலகாமம் NFGG செயற்குழு செயலாளர் H.M ஹனிஸ்.