தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் – 2017

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2004 ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருட்டு தம்பலகமம் பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது .

இதன் அடிப்படையில் கீழ் குறிப்பிடப்படும் போட்டி நிகழ்ச்சிகளுக்கு உரிய நிபந்தனைப் படி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளை பங்குகொள்ளச் செய்யுமாறு  தம்பலகமப்  பிரதேச சபை அனைத்து பாடசாலை அதிபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.


பங்குபற்றும் மாணவர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் 2017.10.02 ந் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

முழுமையான தகவல்கள் தங்கள் பாடசாலை முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

போட்டி நிகழ்வுகள் -

01. வாசிப்புப் போட்டி
02. கட்டுரைப் போட்டி
03. சிறுகதை
04. திருக்குறள் மன்னமும் பொருளுடன் உரைத்தலும்.
05. ஹஸீதா (இஸ்லாமிய கீதம்)
06. கதை சொல்லும் நேரம்
07. சொற் போர் (விவாதம்)
08. “சொல்வோம் வெல்வோம்” வினா விடைப் போட்டி
09. சிறுகதை திறந்த பிரிவு


தகவல் –
செயலாளர்,
தம்பலகமம் பிரதேச சபை,

முள்ளிப்பொத்தானை .