திருகோணமலையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான புதிய பஸ்சேவையை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருகோணமலை டிப்போவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சேவை தினமும் திருகோணமலையில் இருந்து மாலை 06.30 மணிக்கும் கட்டுநாயக்கவில் இருந்து காலை 09.00 மணிக்கும் இச்சேவை தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது.

திருகோணமலையில் இருந்து கிண்ணியா ,கந்தளாய் ,குருநாகல் ,நாரம்பொல மீகமுவ ஊடாக கட்டுநாயக்கவை சென்றடைகிறது.

மேலதிக தகவல்களுக்கு
0262222201,
0772105068 எனும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறும் திருகோணமலை டிப்போ கேட்டுள்ளது