புஹாரி நகர் , ஈச்ச நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் புனித நோன்பு பெருநாள் தொழுகையினை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நிறைவேற்றினார்கள்.

இதன் போது ஹுசைன் மெளலவி உரையாட்டுகையில் நோன்பு பெருநாளின் சிறப்பை கூறிவிட்டு இளைஞர்களுக்கான செய்தி ஒன்றை  கூறினார் " அவசரம் வேண்டாம், வேகம் வேண்டாம், நிதானமாக செயற்படுங்கள் உங்கள் உயிர் பெருமதியானது எமது ஊருக்கு நீங்கள் தேவை கட்டுக்கடங்காத வேகம் இந்த மாதத்தில் பல இளைஞர்களின் உயிர்களை எமது ஊரில் இருந்து எடுத்துவிட்டது , இந்த நாளிள் விபத்துக்கள் அதிகம் இடம் பெருகின்றன எனவே நீங்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளுங்கள் வேகத்தை கட்டுப்படுத்துங்கள் என இளைஞர்களிடம் கேட்டுக் கொண்டார்.