எமது பிரதேசத்தில் காணப்படும் சகல கிராமங்களும் ஜனாஸா நலன்பரி சங்கத்தை சகல கிராமங்களிளும் பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவு செய்யுங்கள் சகோதர்களே! எனது கிராமம் ஆனது சிராஜ் நகரில் பதிவிற்கான வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அதன் பிறகு பிரதேசத்திற்கு மிக முக்கியமாக தற்போது தேவையான ஒன்று ஜனாஸா வாகனம் .அனைவரும் அனைத்து விடயங்களையும் பேசுகின்றோம் ஆனால் நமக்கு முக்கியமான விடயங்கைளை மறந்து விடுகின்றோம்.

திருகோணமலை,கந்தளாய், கொழும்பு,கண்டி,மட்டக்களப்பு, போன்ற இடங்களில் மற்றும் ஏனைய மாவட்டங்களில் மரணம் நிகழ்கின்ற போது அங்கிருந்து தம்பலகமத்திற்கு ஜனாஸாவை கொண்டு வருவதில் அவ்விடங்களிலுள்ள வாகனங்களை Hireற்கு பெறும்போது பல்வேறு சிரமங்களை எமது உறவுகள் எதிர்கொள்கிறார்கள்.

01.சில வாகன உரிமையாளர்கள் தமது வாகனத்தில் ஜனாஸாவை கொண்டு செல்ல மறுப்பது உண்டு.
02. ஜனாஸாவை கொண்டு வர வழமையை விட அதிக பணம் அறவிடுகின்றமை
03. சாதாரண வாகனங்களில் ஜனாஸா எடுத்து செல்லுமளவிற்கு முறையானது வசதியின்மையும் காணப்படுகின்றது.

எனவே இதனை கருத்திற் கொண்டு ஜனாஸாவுக்கான ஒரு தனியான வாகனம் ஒன்றினை எமது பிரதேசத்தின் சார்பாக ஜனாஸா நலன்புரி சங்கம் ஒன்றினை அமைத்து வாகனத்தை கொள்வனவு செய்ய முயற்சி செய்ய எமது தலைவர்கள் முன் வரவேண்டும்.
Safeeullah Mohammed

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...