ஒருசில பௌத்த மத குருக்கள், பிக்குகள் என்று அழைப்பதற்குக்கூட தகுதியற்றவர்கள்
பௌத்த தர்மத்தை மீறுகின்ற, இனவாதத்தை தூண்டுகின்ற மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற ஒருசில பௌத்த மத குருக்கள், பிக்குகள் என்று அழைப்பதற்குக்கூட தகுதியற்றவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் இனவாதம் மற்றும் இனங்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்படுவதற்கு சில குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
பௌத்த பிக்குகள் சிலர் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இப்படிப்பட்டவர்களை தேரர்கள் என்றுகூட சொல்வதற்கு நான் விரும்பவில்லை. புத்தர் கூறிய தர்மத்தை இவர்கள் செய்யவில்லை.
இது பொய்யல்ல என்பது மக்களுக்குப் புரிகிறது. எம்மிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தியது குறுகிய அரசியல் இலாபத்தை விரும்பும் அரசியல்வாதிகளாகும். சிங்கள மக்களுக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். அப்போதே அவர்களின் வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கும் எனவும் அவ்வாறான அரசியல்வாதிகள் நம்புகின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments