" தம்பலகாமத்தில் இருந்து கிழக்கு மாகாண சபைக்கு ஒருவர் " என்ற இலக்கை நோக்கி செயற்படும் திருகோணமலை பிரதேச அபிவிருத்திக்கான ஒன்றியம் நடாத்தும் உதைப்பந்தாட்ட போட்டியின் கால் இறுதி சுற்றுக்கள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இன்றைய தினம் புஹாரி நகர் பொது விளையாட்டு மைதானத்தில் அல் - கிக்மா மற்றும் அல் - இஸ்லாம் அணிகள் மோதியது இதில் அல் - கிக்மா அணி வெற்றி பெற்றது.

சிறாஜ் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் விக்டோரி அணியும் சிறாஜ் அணியும் மோதிக் கொண்டன இதில் சிறாஜ் அணியினர் வெற்றிபெற்றனர்.