சிறப்பாக நடைபெற்ற TDDF கிண்ண இறுதிப்போட்டி.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கான ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றின் இறுதிப் போட்டி இன்று (2017/05/26) நடைபெற்றது.
இப்போட்டியில் மகசன் விளையாட்டுக் கழகமும் சிறாஜ் விளையாட்டுக் கழகமும் மோதியதில் மகசன் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது,
மிகக் கோலாகலகமா நடைபெற்ற இப்போட்டியினை பார்வையிட அதிகளவிலான மக்கள் வந்திருந்தனர்.
தம்பலகாமத்தில் இருந்து ஒரு பிரதிநிதியினை கிழக்கு மாகாண சபைக்கு வென்றிட மக்களை விழிப்புணர்வு படுத்தும் நோக்கில் விளையாட்டுடன் கூடிய பிரச்சாரம் என்ற அடிப்படையில் இப் போட்டி ஒழுங்கு படுத்தப்பட்டு இருந்தது.
இங்கு உரையாட்டிய M.H. KANI (SLAS) " தம்பலகாம் கல்வியில் வளரச்சியை நோக்கிச் செல்கின்றது, வைத்தியர்கள், பொறியாளர்கள், சட்டத்தரணிகள், நிர்வாக அதிகாரிகள், ஆசியர்கள் என பலரும் இங்கே உருவாக்கப் பட்டுள்ளார்கள் இருந்த போதிலும் எமது தம்பலகாமம் ஏன் இன்னும் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது, அதற்கான காரணம் என்னவென சிந்தியுங்கள் தம்பலகாமத்தில் அதிகாரம் உள்ள ஒரு அரசியல் தலைவர் இல்லை அதை நாம் அனைவரும் சேர்ந்தால் உருவாக்க முடியும் " என குறிப்பிட்டார்.
0 Comments