பின்வாங்கியது நிஜாமியா, போட்டி இன்றி வென்றது விக்டோரியா : தம்பலகாம Tddf கிண்ணம்.
தம்பலகாமத்தில் இருந்து கிழக்கு மாகாண சபைக்கு ஒரு பிரதிநிதியினை அனுப்பும் நோக்கில் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்திவரும் Tddf தம்பலகாம விளையாட்டுக் கழகங்களுக் இடையிலான உதைப் போட்டியினை நடாத்தி வருகின்றது.
இன்றைய போட்டிகள் விக்டோரிய மற்றும் புஹாரி மைதானங்களிள் நடைபெற்றது , இதில் விக்டோரிய மைதானத்தில் நிஜாமியா விளையாட்டு கழகமும் விக்டோரிய விளையாட்டு கழகமும் மோத இருந்த நிலையில் நிஜாமியா வி.க பின்வாங்கியதால் விக்டோரிய வி.க போட்டி இன்றி வெற்றி பெற்றது.
புஹாரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அப்பல் விளையாட்டு கழகமும் புஹாரி விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டதில் அப்பல் வி.க வெற்றி பெற்றது, இதில் சிறந்த விளையாட்டு வீரனாக அப்பில் அனியில் இருந்து 5ம் இலக்க முஜிப் என்பர் தெரிவு செய்யப் பட்டு பரிசு கிண்ணம் வழங்கப்பட்டது.
0 Comments