தம்பலகாம அரபாநகரில் மைதான சன்டை.
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃரூப் அவர்களினால் ஏற்பாடு செய்து இருந்த பொதுவிளையாட்டு மைதானம் தொடர்பான கூட்டத்தில் அரபாநகர் ஜும்மாபள்ளியில் கைகலப்பு (சன்டை) ஏற்பட்டது.
சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்பு அல் கிக்மா விளையாட்டுக் கழகத்திற்கு பொதுவிளையாட்டு மைதானம் அமைப்பதற்கான காணியினை பெற்றுத்தருவதாக அப்துல்லா மஃரூப் அவர்களாள் கூறப்பட்டு காணியும் இனங்காணப்பட்டது .
அக்காணிக்கான பணம் வழங்க தாமதம்மானதினால் காணி உரிமையாளர் காணியினை வேறுநபருக்கு விற்றுள்ளார், விற்கப்பட்ட காணியினை மீண்டும் பெற்றுத்தருவதாக கூறி அதுதொடர்பாக ஆராய இன்று ஜும்மாவின்பின்பு அரபாநகர் பள்ளியில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் முன்பு பேசப்பட்ட காணியின் விலையைவிட தற்போதய உரிமையாளரினால் அதிகவிளை கூறப்பட்டதை அடுத்து அங்கு வாக்கு வாதம் ஏற்பட்டு அது அடிதடியாக மாறியுள்ளது.
எவ்வாறாயினும் அக்காணியினை மீண்டும் பொற்றுத்தருவதாக அப்பதுல்லா மஃகரூப் கூறிச்சென்றுள்ளார், அதன் பின்பு அவரின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் அங்கு தொடர்ந்து அடிதடி சன்டையில் ஈடுபட்டதாக அங்கியிருந்த செய்தியாளர் குறிப்பிட்டார்.
0 Comments