தம்பலகாமத்தில் உள்ள சிறாஜ் நகர் முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவர்கள் தங்களின் கல்வியைத் தொடர்வதற்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி இன்று (2017/05/15) பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

539 மாணவர்கள் இப்பாடசாலையில் கற்று வருவதாகவும் 36 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 16 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதியாக உள்ள  20 ஆசிரியர்களையும் நியமித்து தருமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.