முள்ளிப்பொத்தானை 95ம் கட்டையில் முச்சக்கர வண்டி விபத்து.
முள்ளிப்பொத்தானை 95ம் கட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லடிப் பாலத்தில் மோதி முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதில் பயணித்த மூவரும் பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர், கந்தளாய் பகுதியை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியே இதன் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதியின் தூக்கமே விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments