அரசியல் காலத்தின் தேவை ஆனாலும் தம்பலகாம மக்கள் நாம் கட்சிகளின் அடிமைகள் இல்லை !!
தம்பலகாம மக்களின் வாக்குகள் பிரிந்து போகாமல் இருப்பதற்காக
பிரிந்துள்ள நாம் கட்சிகள் என்று கங்கனம் கட்டி அலையாமல் ஒன்றினைந்து வாக்களிக்க ஒன்றுபடுவோம்.
இன்ஷா அல்லாஹ் எதிர் நோக்கி வருகின்ற மாகாண சபை தேர்தலில் தம்பலகாம விடியாலுக்காக பிரதேச அபிவிருத்திக்காக அனைத்து கட்சிகள் சார்ந்தவர்களும் பகைமை கட்சி பாடுபாகுகளை களைந்தரிந்து எமது முழு பலத்தினையும் பயன் படுத்தி சுயட்சையாக
களம்மிறங்குவதே சிறந்ததாகும்.
தம்பலகாமத்தை பொருத்தமட்டில் சுயட்சையாக பேட்டியிட்டால் நமது பிரதேசம் பாரியளவில் அபிவிருத்தியடைய வாய்ப்புக்கள் அதிகமுண்டு சுயட்சை மூலமாக போட்டியிட்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி போதிய விளக்கங்கள் போதமைய ஓர் சிலரின் தயக்கங்களுக்கு காரணியாகவுள்ளது.
மாகாண சபை தேர்தலை பொறுத்தளவில் சுயட்சைக் கட்சிகள் மூலம் போட்டியிட்டவர் வெற்றிபெறுவராயின் பிரதான கட்சிகள் மூலம் வெற்றியடைந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் சம அளவில் பகிரப்படுகிவடுவது மட்டுமின்றி பேரம் பேசும் சக்தியாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சுயட்சை கட்சிகள் மூலம் போட்டியிட்டால் நாம் அடையவிருக்கும் நன்மைகளை அதிகஅதிகமாக மக்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்படுதல் வேண்டும்.
என்னுடைய கருத்தாவது எதிர் நோக்கி வருகின்ற மாகாண சபை தேர்தலில் ஒன்றினைந்து நாம் அனைவரும் பிரதேச சபைக்கும்,மாகாண சபைக்கும் சுயட்சை வேற்பாளர்களுக்கு வாக்களிப்பது
பிரதேசத்தின் மூவினமக்களும் ஒருமித்த தீர்மாணம் முன்னெடுப்பின் தம்பலகாம பிரதேசத்தின் அரசியல் கொல்லையர் கும்பல்களை கில்லியெறியந்து வளமான தம்பலகாம அரசியலை வளமாக்க முடியும்.
அத்துடன் பிரதேச சபை ,மாகாண சபை அந்தக்காலத்தின் களநிலவரங்களுக்கு அமைய கலந்துரையாடலில் தீர்மாணித்து ஒன்றுகூடல் நடத்துவது பற்றிய கருத்துக்களை முன்னெடுத்து ஒன்றுபட்ட தம்பலகாம மக்களாய் தீர்மானம் எடுப்பதே சிறந்தது.
அத்துடன் சுயற்சை கட்சிகள் முதலில் தம்பலகாம பிரதேச சபை ,மாகாண சபை போன்றனவற்றில் வேட்பார்களை தெரிவு செய்வதற்கும் அதில் சிறந்தவருக்கு வாக்களித்து மக்களின் அரசியல் சானக்கியத்தை தம்பலகாம பிரதேசத்தின் வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்துக்கு கற்பிக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள இந்த எதிர்வரும் தேர்தலில் எல்லோரும் ஒன்றுபட்டு முன்னெடுப்போம் ஏனெனில் கடந்த அரசியல் காலங்கள் ஊடகமற்று தனிமனித வானொலியாகவும்,நான்கு சவருக்குல்லான தீர்மானமும் அரங்கேறி வந்தமை அகற்றப்பட்டு இன்று முகநூலில் விரல் நுனியில் அரசியல் அரங்கேறியுள்ளதால் ஒன்றுபட்ட ஒப்பந்தத்தில் வாக்களிப்போம்.
தம்பலகாம அரசியல் சீரழிந்து போகும்.அத்துடன் தம்பலகாமஅரசியல் மாற்றம் காலத்தின் தேவை ஆகவே மக்கள் நாம் கட்சிகளின் அடிமைகள் இல்லை மக்களின் தேவைக்கே அரசியல் என்பதை புரிந்து காலத்துக்கு ஏற்ப நாம் கட்சிகளைப் பாவிப்போம் அன்றி கட்சிகளுக்காக மக்களை தாரவார்ப்பதை தவிர்ப்போம் எனக் கூறி விடைபெறுகின்றேன்.
"நன்றி"
மஹ்ரூப் நிப்ராஸ்
98 அரபா நகர்
0 Comments