திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் ஈருறுளிப் பேரணியானது 19.04.2017 புதன்கிழமை காலை 7.30 நடைபெற உள்ளது .

மூதூர்,கிண்ணியா,தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொதுமக்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் ஈருறுளிப் பேரணியானது  மல்லிகைத்தீவு சந்தி மற்றும் நாவலடிச்சந்தி ஆகிய இடங்களில் ஆரம்பமாகி 3cd சந்தியும் இணைந்து இரால்குழி மக்களை இணைத்துக்கொண்டு ஆலங்கேணிக்கு சென்று அக்கிராம மக்களை இணைத்துக்கொண்டு கிண்ணியா குட்டிக்கராச் சந்தியிலிருந்து தம்பலகாமம்,கிண்ணியா மக்களை இணைத்து திருமலை ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட களத்தை வந்தடைய உள்ளது.

இப்பயணமானது பட்டதாரிகளின் எமது நலன் கருதி பொதுமக்களால் நடாத்தப்படவுள்ள காரணத்தால் எமது ஒத்துளைப்பினையும் வழங்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

எமது பட்டதாரிகள் அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்)