ஒற்றுமையனும் கயிற்றை பலமாக பற்றி பிடித்து பிரதேச வாதம் கட்சி பேதங்கள் மறந்து நமது எதிர்காலத்திற்காகவும் எதிர்கால சந்ததிகளுக்காகவும் சிந்தித்து சிறந்ததோர் முடிவினை எடுத்து நம் உரிமைகளை வென்றடுக்க ஒன்றினைவோம்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தொகுதியின் ஒரு முக்கிய புள்ளியாக நமதூர் தம்பலகாமம் விளங்குகின்றது பல முறை அரசியல்வாதிகளின் வெற்றிக்கு வித்திட்டதே நமது பிரதேச வாக்கு வங்கிதான் இதையாராலூம் மறுக்க முடியாத உண்மை மொத்தமாக சுமார் 34000ற்கு அதிகமான சனத்தொகையைக் கொண்ட தம்பலகாமத்தில் முஸ்லீம்கள் மட்டும் 13000அதிகமாக செறிந்து வாழ்கின்றனர்,  இத்தருவாயில் நமக்கான ஒரு பிரதிநிதி கட்டாயமாக தேவையாக உள்ளது.

நமது சமூகம் ஆற்றில் மிதக்கும் வைக்கோல் கட்டு போன்று ஆற்றின் ஓட்டத்திற்கு இழுபட்டு செல்வதை போன்று சமூகத்தை மறந்து தன் சுயநலத்துக்காக யார் யாரோ பின்னால் ஓடிக்கொண்டு கடைசியில் ஏமாற்றத்தை பரிசாக அன்றிலிருந்து இன்று வரை பெற்றுக் கொண்டு வருகின்றோம்.

யாரையாவது பிடித்து எதையாவது பெற்றுக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டு சமூகத்தை தமது இஷ்டம் போல் பல குழுக்களாக பிரிந்து கொண்டு ஆளுக் ஆள் குழப்பங்களை விளைவித்து கொண்டு பிரிந்து செயற்படாமல் நமது சமூகம் தமக்கான பிரதிநிதுவத்தை  ஒற்றுமையுடன்  ஒரு தலைமையின் கீழ் செயற்பட்டு எமது கல்வி. பொருளாதார வளர்ச்சி இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு சமூகத்தில் நிலவுகின்ற பல பிரச்சினைகளையும் தேவைகளையும் எம்மால் நிறைவேற்றிக் கொள்ளமுடியும் யாரிடமும் கையேந்தும் தேவை இருக்காது.

நமது காலடியின் கீழ் நமக்கான எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது இதை வெளிக் கொண்டு வருவதற்கு இளைஞர்கள் மற்றும் உண்மையான சமூக அக்கறை கொண்ட நலன் விரும்பிகளால் நிச்சயமாக முடியும் நமதுரில் மிக திறன் மிக்க படித்த புத்திஜீவிகள் அதிகமாக உள்ளனர்.
உற்சாகமாக செயற்படக்கூடிய சகோதரர்கள் தற்சமயம் உள்ளார்கள் இவர்களுக்காக ஒற்றுமையுடன் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்ற தலைமைத்துவம் உருவாக வேண்டும்.
   
மஹ்ரூப் நிப்ராஸ் அரபா நகர்

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...