தம்பலகாமம் வாழ் இளைஞர் சமுதாயமே.
உங்கள் தலை விதியை நீஙகளே தீர்மானிக்கும் தருணம் வெகு தூரத்தில் இல்லை.

உங்களை நீங்களே ஆளக்கூடிய சந்தர்ப்பத்தை பெறக்கூடிய தருணம் உங்களை மிக அண்மித்து கொண்டிருக்கிறது.

இது நீங்கள் அனைவரும் எதிர்பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் ஓயாத அலையாக மோதிக் கொண்டிருப்பதுமான நமது பிரதேச மக்களின் தலை விதியை உங்களது கரம் கொண்டே மாற்றியமைத்து நமது மக்களின் துயர் துடைக்கும் சந்தர்ப்பம். அது தான் நாம் மிகா விரைவில் எதிர் கொள்ள இருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தல்.

இத்தேர்தலை நாம் நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள போதிய வசதிகள் நம்மிடம் இருக்கின்றன.
அவை.
1.ஒரு பிரதி நிதியை பெற்றுக்கொள்ள போதிய வாக்குப்பலம்.
2.தகுதியான வேட்பாளர்கள்
3.ஆலோசனைகள் வழங்க போதிய அரசியல் சிந்தனையாளர்கள்.
4.உங்களை வழி நடத்த உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக சிந்தனையாளர்கள்,
5.நல்லவற்றையும் தீயவற்றையும் பிரித்தாளக்கூடிய சக்தி படைத்த நீங்கள் என நம்மை நாமே ஆள்வதற்கான அடித்தளத்தை போடுவதற்கான அனைத்து மூலதனமும் நம்மிடம் இருந்தாலும் நம்மிடம் இல்லாத ஒரு விடயத்தால் நம் சமூகம் மீண்டும் போய் இருள் சூழ்ந்த அரசியலுக்குள் வீழ்வதற்கு நீங்கள் அனுமதிக்கலாமா? இதை தடுப்பதற்கான ஆழி உங்கள் கையில் தான் இருக்கிறது.

நீங்கள் பெரிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டாம்.அதாவது உங்களிடம் இந்த சமூகம் எதிர்பார்ப்பது உங்களுடைய ஒற்றுமை எனும் பலம் பொருந்திய செயற்பாடுகளை மட்டுமே.

இந்த ஒற்றுமை எனும் மூலதனத்தை மட்டும் நமது சமூக நலன் கருதி எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் நமது பிரதேசத்தில் இருந்து ஒரு பிரதிநிதியை நமக்காக தெரிவு செய்து கொள்வதில் காட்டுங்கள்.
வெற்றிக்கணி நம் காலடியில் வீழ்ந்து கிடைக்கும்.

Abdul Muthalib Jafarullah

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...