பிறப்பு:31.03.1912
#ஆரம்பக் கல்வி:தி/இந்து கல்லூரி,
#ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்றார்
#ஆங்கிலத்தில் திறமை காட்டிய அபூபக்கர் அவர்கள் பாடசாலைக் காலத்தில் "college Shakespeare "என அன்பாக அழைக்கப்பட்டார்.

#1947 ல் இலங்கை முதலாவது பாராளுமன்ற தேர்தலில் மூதூர் தொகுதி சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 3480 வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார்.
#மூதூர் தொகுதி அரசியல் வரலாற்றில் முதலாவது பா.உ என்ற பெருமையைப் பெற்றார்.

#இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலேயே தனது உரைகளை நிகழத்துவார்.

#பாராளுமன்ற உரைகளின்போது ஆங்கிலத்தில் கவிதை பாடி தனது தேவைகளை முன்வைத்த பெருமகன்.

#இதனால் அன்றய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்"Ceylon Shakespeare" என்று அழைத்தனர்.

#1948 ல் பாராளுமன்றத்தில்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை சேர்:ராசீக் பரீட் சபையில் முன்வைத போது மூதூர் தொகுதி அபூபக்கர்,புத்தளம் தொகுதி எச்.எஸ்.இஸ்மாயில் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து பேசினர்.

இவரின் சேவைகள்.
#################
திருமலை மாவட்டத்தில் புதிய பாடசாலைகள் நிறுவும் கல்வித் திணைக்கள குழுவின் அங்கத்தவராக இருந்தார்.

இக் குழுவின் சிபார்சில் 11 பாடசாலைகள்
ஆரம்பிக்கப்பட்டன.
**************************
1.கம்பன் குடா - பன்குளம்
2.அரிப்பு த.வி
3.பெரியவெளி த.வி
4உப்பு வெளி த.வி,
5.புதுகுடியிருப்பு த.வி
6.இலக்கந்தை த.வி
7.ஆண்டாங்குளம் வித்தி
8.பாலைத் தோப்பூர் ( ஸாகிறா வித்தி)
9.ஈச்சிலம் பற்று வித்தி
10.அக்கரைச் சேனை வித்தி( அல் ஹிதாயா)
11.திருகோணமலை முஸ்லிம் வித்தி( ஸாகிறா கல்லூரி),

#கிண்ணியா மத்திய கல்லூரியை நிறுவுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டார்.

#பாடசாலைகளை விரிவுபடுத்தல்,கட்டிடங்கள் வழங்கள்,மல சல கூடங்கள்,கிணறுகள்,ஆசிரியர் விடுதிகள், என்பனவற்றை தனது ஒதுக்கீட்டில் இருந்து வழங்கினார்.

விசேட சேவைகள்
###########
1.கிண்ணியா மாவட்ட வைத்தியசாலை,
2. பெரிய கிண்ணியா தபாலகம்,
3.தம்பலகாம புகையிரத நிலையம்,
4.கிண்ணியா இயந்திரப் பாதை,
5.கிண்ணியா ஒரிகன் பாலம்,
6.தொலைபேசி இணைப்பு,
7.வெருகல் பாதை
என்பன அபூபக்கர் பா.உ அவர்களால் பெற்றுக் கொடுக்கப்பட்ட அபிவிருத்தியும்,சேவைகளுமாகும்.
1948 ல் முதலாவது பாராளுமன்ற த்தை அலங்கரித்த இப் பெருமகனை என்றும் நினைவு கூர்வோம்.
நன்றி : Kms Mutur