தம்பலகாமத்தில் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் Tddf ( தம்பலகாம பிரதேச அபிவிருத்தி ஒன்றியம் ) இன்று 10ம் கொலனியில் தனது விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்தியது.

நாங்கள் எந்த கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல எந்த அரசியல் வாதியின் பின்புலத்திலும் செயற்படவும் இல்லை எங்கள் நோக்கம் எங்கள் ஊரில் இருந்து மாகாண சபைக்கு ஒரு பிரதிநிதியை அனுப்புவது என Tddf தலைவர் அன்சார் மெளலவி அங்கு உரையாட்டும் போது குறிப்பிட்டார், 

அவர் தொடர்ந்து உரையாட்டுகையில்,  61 வருடகால வரலாற்றை கொண்ட தம்பலகாமத்தில் அரசியல் எப்போதும் எம் இரத்த உறவான கிண்ணியாவுடன் இணைந்தே வந்துள்ளது, நாம் அதை நன்றி உணர்வோடு செய்துள்ளோம், எதிர் காலங்களிளும் அதனை செய்வோம் பாராளுமன்ற தேர்தலின் போது கிண்ணியாவை பலப்படுத்துவோம், மாகண சபை தேர்தலின் போது கட்சி பேதம் இன்றி நாம் அனைவரும்  எம் ஊரை பலப்படுத்துவோம்.

கிண்ணியா மக்களும் எங்களுக்கு இவ்விடயத்தில் உதவ வேண்டும் அது அவர்களின் கடமை, கிண்ணியாவிற்கு வெளியில் மாகாண சபை உறுப்பினர் உருவாக்கப்படுவது என்றால் அது தம்பலகாமத்தில்தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் அதை கிண்ணியர்களே முன்னின்று செய்து இருக்க வேண்டும், ஆனாலும் எம் ஊரை இந்த விடயத்தில் அவர்கள் கைவிட்டதற்கான காரணம் தெரியவில்லை.

நாம் விழித்துக் கொள்வோம் பெரும்பான்மை கட்சியிகளிள் இணைந்து எமக்கான ஒரு பிரதிநிதியினை பெறமுடியாது, கடந்த காலங்களிள் நாம் இவ்வாறு முயன்று எம்மாமல் முடியாமல் போனது எமக்கான ஒரு பாடம்.

தனித்து நின்று எம் ஊரில் உள்ள அனைத்து அரசியல் வாதிகளையும் ஓன்றாய் இணைத்துக் கொண்டு புதியவர்களையும் சேர்த்துக் கொண்டு நாம் இம்முறை மாகாண சபை தேர்தலை சந்திப்போம் என குறிப்பிட்டார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...