விதவையாகும் மண்ணை மீட்டெடுப்போம் - கவிதை
விதவையாகும் மண்ணை மீட்டெடுப்போம்.
வால் பிடித்து அலைந்தது போதும்
மலடி ஈனும் மகனைப் போல
எம் மண்ணும் ஒருவனை பிரசவிக்கட்டும்
எம் வாக்குகளால்.
வாரி வழங்கியது போதும்
வாக்குகளை
வாக்குகள் செரிந்த மண்ணும்
எம் மண்தான்
ஏன்
இன்னும்
ஒருவன் கூட மாகாண சபை
செல்ல வில்லை
சிந்திப்போம் மக்களே!
நாளைய முடிவை திறன்பட
செயல்படுத்துவோம்.
எம் மண்ணுக்கு எதில்தான் பஞ்சம்
எழிலா?
ஏறு போடும் மானிடத்திலா?
இல்லை தைரியத்திலா?
எதிலுமில்லை அச்சம்
நாளைய எட்டுக்கள்
எம் மண்ணில் பல கொடிகளை நடும்
பல முன்னோடிகளின் பாதையில்.
குவைசர் முகைதீன்.
498 சிறாஜ் நகர் தம்பலகமம்.
0 Comments