தம்பலகாம மக்களை பகடக்காய்களாக கருதும் நிலை மாற்றமடைய வேண்டும் !
தம்பலகாமம்!முள்ளிப்பத்தனை!
கிண்ணியாவின் உடன் பிறப்புகள் வாழ்கின்ற புனிதபூமி.பொருளாதாரத்தில் வேளாண்மை,ஆடு மாடு மற்றும் விவசாயத்துறை மூலம் தன்நிறைவு கண்ட பிரதேசம்.அரசியலில் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களை விட கிண்ணியாவின் பலதலமைத்துவங்களுக்கு வரலாற்று ரீதியாக பலமாகவும் களமாகவும் விளங்கும் சரித்திர பூமி.
மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கும் போக்குவரத்திற்கும் இடைத்தரகராக விளங்கும் இடம்.
அண்மைக்காலமாக பல படித்த மற்றும் முற்போக்கு இளைஞர்கள் மற்றும் மார்க்கம் சார்ந்தவர்களை முதனிலைப்படுத்தி வருகிறது.குறிப்பாக அரசியல்ரீதியாக விழிப்புணர்வும் ஆர்வமும் அதிகரித்துள்ளது ஆரோக்கியமான சமூக வளர்ச்சியை நோக்கிய பயணத்தை இந்தப் பிரதேசத்தில் காணலாம்.
மறுபுறம் துரதிஸ்டவசமாக அரசியலை வியாபாரமாகவும், விளம்பரமாகவும் நடாத்துகின்றவர்களின் அத்துமீற்கள் அதிகரித்துள்ளது.பிரதேச ஒற்றுமையை சீரழித்து தமது சொந்த வயிற்றை நிரப்ப பலஅரசியல்வாதிகள் தினம் முகாமிடுகின்றனர்.
இவர்களின் சுயநலமிக்கதும் வங்குரோத்தான செயற்பாடுகளால் இப்பிரதேச இளைஞர்கள் மத்தியில் கருத்து ஒறுமைப்பாட்டுக்கான கோஷம் எழுந்துள்ளது.இது நாளை பிரதேசவாதமாக மாறினால் அதற்கான பொறுப்பை இந்த மாவட்ட அரசியல்தலமைகளே ஏற்கவேண்டும்.அதுமட்டுமல்ல அதற்காக எதிர்காலத்தில் அதிகமான விலை கொடுக்க வேண்டிவரும்.
ஆகவே வெறுமனே வாக்குகளுக்காக இப்பிரதேச மக்களை பகடக்காய்களாக கருதும் நிலை மாற்றமடைய வேண்டும்.இதற்கான மனபக்குவத்தை அரசியல் தலமைகள் முன்னெடுக்க வேண்டும்.
ஆகவே அரசியலிலும் அபிவிருத்தியிலும் இப்பிரேத மக்களை பங்காளிகளாக மாற்ற வேண்டும்.அவர்களின் வாக்குகளுக்கு அதிகார பலம் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாற்றம் கண்டுள்ளது.
சட்டத்தரணி Fahmy Mohamedட.
0 Comments