sireku


கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த மகாவெலி திசை திருப்பத்தின் எனது பாரிய முயற்சி அல்லாஹ்வின் உதவியுடன் வெற்றியடைந்துள்ளது . சவூதி அரசிடம் அணுமதி கோரி அனுப்பட்டிருந்த எனது முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நிதிசார் அணுமதியை இலங்கை அரசுக்கு சட்டபூர்வமாக சவூதி அரசு அறிவித்துள்ளது.

இது சவூதி ரியாலில் 168,750,000 One hundred and sixty-eight million, seven hundred and fifty thousand அல்ஹம்துலில்லாஹ்.
இத்திட்டத்தினால் பல விவசாய குடும்பங்கள் பயனடைவதுடன், பல ஆயிரகணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வருடத்தில் ஒருமுறை மாத்திரமே (மானவரி ) பயன்படுத்தப்பட்ட வயல் நிலங்கள் இத்திட்டத்தின் பின்னர் வருடத்தில் முற்போகமும் பயிரிடலாம்.

இதன் மூலம் எமது விவசாயத்தில் நாம் தன்னிறைவடைய முடியும். இன்னும் எமது பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய பன்னை வளர்ப்பு, புதிய தொழிற்சாலைகள் உறுவாக்கி பல் ஆயிரம் இளைஞர்களுக்கு நாம் வேலைவாய்ப்பு வழங்கவும் முடியும்.

இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த கட்ட முயற்சியாக எமது கல்வி சமூகத்துக்கான பாரிய முன்னெடுப்புக்கள் வெற்றி பாதையை நோக்கியே நகரும் , அத்துடன் மீனவ சமூகத்தை முழுமையாக திருப்திப்படுத்தும் பிரமான்ட முன்னெடுப்புகளும் என்னிடமுள்ளது.

இன்ஷா அல்லாஹ் இவற்றில் வெற்றியடைந்தால், நாம் தேசியரீதியில் பொருளாதாரத்தில் முன்னணிலை வகிக்கும் எனது கனவை நினைவாக்கலாம்.
இவை ஒவ்வொன்றும் வெற்றியடைய உங்கள் பெறுமதியான பிராத்தனையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.