திருகோணமலை வேலையில்லாப் பட்டதாரிகள் கிண்ணியா வீச்சுக்கு( beach) வரும்படி அழைப்பு .
திருகோணமலை வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவரும் வியாழக்கிழமை (2017/03/02) கிண்ணியா கடற்கரையிக்கு ( beach ) வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு , அம்பாரை மாவட்டங்களில் ஏற்கனவே சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது ,
அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவழங்கு , பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய் , பட்டதாரிகளுக்கிடையே போட்டிப் பரீட்சை வைக்காதே , ஆட்சேர்ப்பு வயதெல்லையினை 45தாக அதிகரி என இவர்கள் போராட்டம் தொடர்கிரது.
அதே வேளை இன்று கிழக்கு முதலமைச்சர் பிரதமருடன் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதல் தொடர்பாக கலந்தாய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று ஏனைய பாராளுமன்ற அமைச்சர்கள் , உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இவர்கள் தொடர்பில் விரைவில் தீர்வு வழங்காவிடில் இப்போராட்டம் நாடு முழுவதும் வலுவடைவதட்கான வாய்ப்புகள் அதிகம்.
0 Comments