sireku

கிழக்கிலங்கையில் அமைந்துள்ள அழகிய விவசாய கிராமமாகிய தம்பலகாமாதின் அரசியல் மாற்றம் பற்றியும் அதற்கான தேவையின் முக்கியத்துவம் பற்றியும் கடந்த மடலில் கூறியிருந்தேன் , எவ்வாறு மாகாண சபைக்கு தம்பலகாமத்தில் இருந்து ஒருவரை அனுப்புவது என்பது பற்றி இன்று எழுதுகிறேன்.

எமது தம்பலகாமம் மூவினமக்கலாலும் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளை பிரதிநித்துவப் படுத்தும் நபர்கலாலும் அதே போன்று பலவிதமான சமூக அந்தஸ்து உள்ள நபர்களையும் கொண்டமைந்த "இடியப்ப சிக்கல்" போன்ற சமூக கட்டமைப்பை கொண்டுள்ளது. இவ்வாறு அமைந்த எனது தம்பலகாமத்தை ஒற்றுமை படுத்தி குறித்த இலக்கை அடைவது என்பது மிககடினமானது என நீங்கள் நினைத்து இருந்தால் அது தப்பில்லை.

ஆனாலும் அதையும்தான்டி எம்மால் வெற்றிக்கொடி நடமுடியும் ; ஆம் இதோ வழி , நாம் தற்போது உள்ள எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து போட்டியிடக்கூடாது, அவ்வாறு இணையும் போது எமது வாக்குகள் சிதரடிக்கப்படும் காரணம் நாம் தனிப்பட்டவகையில் ஏதாவது ஒரு கட்சி சாந்தவராக இருப்போம் ,  தனது கட்சியை விட்டுக் கொடுத்து இன்னும் ஒரு பெரும்பான்மை கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் , அதுக்கும் அப்பால் பெரும்பான்மை கட்சியில் நாம் சேர்ந்து போட்டியிடப்போவது அதிகாரத்திலும் பணபலத்திலும் செல்வாக்கு மிக்கவர்களுடன் ஆகும் இன்னும் 9000 வாக்குகளை பெற்றால்கூட எமக்கு வெல்ல முடியாது மாறாக நாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையை சேர்த்து வேறொருவர் வென்றிடுவார்.

ஆகவே நாம் தனித்து போட்டி இடுவோம் 13 வேட்பாளர்களை களத்தில் இறக்குவோம் இதில் வாக்கு பலம் உள்ளவர் மாகாணசபை செல்லலாம். இதன் போது எமது வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் அணைத்தும் சேர்த்து 9000 கிடைத்தால்கூட நமக்கு ஒரு பிரதிநிதி கிடைத்துவிடும். நம் ஊரில் கிட்டத்தட்ட 15000 அதிகமான வாக்கு வங்கி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அயல்ஊர்களும் நமக்கு உதவி செய்ய காத்திருக்கு.

மாகாண சபை தேர்தல் காலத்தில் நாம் எந்தகட்சியாக இருந்தாலும் தனியான பொது கட்சியில் ஒன்றுபடுவோம் பாராளுமன்றத் தேர்தல் வரும் போது நமக்கு பிடித்த கட்சிக்கு  ஆதரவு வழங்குவோம். வாருங்கள் தம்பலகாமத்தில் புது விடியலை  உருவாக்குவோம்.
என்.எம் ஹகீல்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...