தம்பலாகம எதிர்கால அரசியல் தொடர்பாக இன்று ஆராயப்பட்டது!
தம்பலாகம மக்கள் அணைவரும் ஒன்றுபடுவோம்!
நம்மூரில் இருந்தது ஒருவரை கிழக்கு மாகாண சபைக்கு வென்றிடுவோம்! என்ற தொனியில் கலந்துரையாடல் முள்ளிப்பபொத்தானை 96ம் கட்டையில் இன்று நடைபெற்றது.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இப்பிரதேசத்தில் ஏனைய சகோதர இனங்களையும் சோர்துக் கொண்டு எதிர் வரும் மாகாண சபை தேர்தலை எதிர்நோக்குவதென இதன் போது முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பொதுகட்சியின் ஊடாக பொதுவேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது .
இதுவரை காலமும் இரத்த உறவு மற்றும் நிலத் தொடர்பு , நட்பு ரீதியான உறவுகள் போன்ற பல்வேறு பட்ட காரணத்தால் தூண்டப்பட்டு அயல் ஊரில் இருந்து அரசியல் தலைவர்களை உருவாக்கிய
போதிலும் அவர்களால் தொடர்ந்தும் புறக்கணிக்க பட்டே வந்துள்ளோம் எனவே இந்நிலை இனியும் தொடரக்கூடாது என்ற கருத்து அணைவரிடம் இருந்தும் இதன் போது ஒலித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments