டிரம்பின் உத்தரலை மீறி, 4 மாத பாத்திமாவுக்கு அமெரிக்காவில் ஆபரேஷன்
sireku
ஈரான் குழந்தைக்கு அமெரிக்காவில் இருதய ஆபரேஷன் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவோமா அறிவித்துள்ளார்.
ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டுள்ளார்.
இந்த உத்தரவால் ஈரான் நாட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற 4 மாத பெண் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இருதய நோயால் தாக்கப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு, ஓரிகன் சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் இருதய ஆபரேஷன் செய்வதற்கு குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் டிரம்ப் உத்தரவால் இந்த குழந்தைக்கு அமெரிக்காவில் ஆபரேஷன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற வகையில், அமெரிக்காவில் இருதய ஆபரேஷன் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவோமா அறிவித்துள்ளார்.
ஈரான் குழந்தை பாத்திமாவுக்கு மேன்ஹாட்டன் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் இருதய ஆபரேஷன் செய்யப்படும், எந்தக் கட்டணமும் அதற்காக வசூலிக்கப்பட மாட்டாது என கவர்னர் ஆண்ட்ரூ குவோமா தெரிவித்தார். குழந்தையின் ஆபரேஷன் செலவு மட்டுமின்றி பெற்றோரின் அமெரிக்க பயணச்செலவும், அவர்கள் நியூயார்க் நகரில் தங்குவதற்கான செலவும், தனிநபர் நிதிகள் மூலம் ஈடு கட்டப்படும் என அறிவிக்கப்பட

0 Comments