உள்ளூராட்சித் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றஞ்சுமத்தியுள்ளது CaFFE அமைப்பு.

ஏனைய அனைவரும் கையொப்பமிட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே எல்லை நிர்ணய அறிக்கையைத் தாமதப்படுத்துவதன் காரணம் மக்கள் முன் சென்று தேர்தலை சந்திப்பதில் இருக்கும் அச்சமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அவ்வமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கை அவர்களுக்கு தேர்தல் மீது இருக்கும் அச்சத்தின் வெளிப்பாடு எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.