திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எம்.சீ.எம். சரீப் .
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த எம்.சீ.எம். சரீப் நியமிக்கப் பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக அமைச்சு செயலாளாரின் சிபார்சுக்கமைய பொதுச் சேவை ஆணைக்குழு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.
தற்போது கிழக்கு மாகாண பேரவை செயலாளராக பணி புரிந்து வரும் இவர் கிழக்கு மாகன சபையின் பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராகப் பணி புரிந்துள்ளார்.
கிண்ணியா, மூதூர், காத்தான்குடி, கோரளைப் பற்று மத்தி ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் பணி புரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments