சம்மாந்துறை நிந்தவூர் அட்டப்பளம் பெரியபள்ளத்துக்கு அருகாமையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிந்தவூர் பகுதியின் வயலொன்றிலிருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஆணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகவும் அதன் மூலமே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேதப் பரிசோனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.