அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 தொலைபேசி வடிவில் கைத்துப்பாக்கி தயாரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் இந்த துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ஐபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி அடுத்த வாரம் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. அதற்கான முன்பதிவுகள் அதிக அளவில் கிடைத்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் அதே வடிவிலான துப்பாக்கி விற்பனைக்கு வரும் பட்சத்தில் அது கண்டம் விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் சூழ்நிலை உள்ளது.

மேலும் இந்த துப்பாக்கியானது தீவிரவாதிகளின் கைகளில் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும், எனவே மக்கள் மற்றும் பொலிஸார் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...