சந்திரனுக்கு தற்போது வயது 4.51 பில்லியன் ஆண்டுகள் .
சந்திரனுக்கு தற்போது வயது 4.51 பில்லியன் ஆண்டுகள் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் குறித்த ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய ஆய்வின்படி, ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்கப்படும் ‘தீய்யா’ நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதன் காரணத்தினாலேயே சந்திரன் உருவானது.
சூரியக்குடும்பம் உருவான பிறகு 6 கோடி ஆண்டுகள் கழித்தே சந்திரன் உருவாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்த ஆய்வை மேற்கொண்ட கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
தீய்யா என்ற கிரகம் மோதியதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை தகவல்கள் மூலம் ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
சந்திரனின் வயதைக் கணக்கிடுவது மிக மிகக் கடினம், ஏனெனில் பலதரப்பட்ட பிற பாறைச்சிதறல்களின் ஒட்டுவேலைதான் சந்திரன் என்பது. ஆனாலும் விஞ்ஞானி பர்போனி 8 ஜிர்கான்களை அதன் ஆதி வடிவத்தில் ஆய்வு செய்ய முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதில் உள்ள யுரேனியம் எவ்வாறு காரீயமாக சிதைமாற்றம் அடைந்துள்ளது என்றும் லியூட்டியம் என்பது எவ்வாறு ஹாஃப்னியம் என்பதாக சிதைமாற்றம் அடைந்துள்ளது என்பதையும் பர்போனி ஆய்வு செய்துள்ளார்.
இந்த மூலக்கூறுகளை ஆய்வு செய்தே சந்திரனின் வயதை மறு நிர்ணயம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments