ராடாரில் தென்படாது தாக்கும் பாகிஸ்தானின் பாபர்-3
அண்மைக்காலமாக தனது ராணுவ ஆற்றலை உலகுக்கு வெளிக்காட்டும் செயற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ள பாகிஸ்தான், பாபர்-3 எனும் ஏவுகனையை நேற்று வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால் இவ் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உயர் தொழிநுட்பத்தில் உருவாகியுள்ள இவ் ஏவுகணை 450 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து தாக்கக் கூடியது.
விஷேட அம்சம் என்னவென்றால் ராடாரிலும் இது பதியாது தாக்குதலை மேற்கொள்ளும் வல்லமை படைத்தது.
பாகிஸ்தானின் மிலிட்டரி விஞ்ஞானத்தின் மிகப்பெரும் வெற்றியாக இது கூறப்படுகின்றது.
ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்களின் தலைமையிலான இத்திட்டம் குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவித் அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகளின் இலக்குகளே தொழிநுட்ப வல்லமை மிக்கதாக இருக்கின்றன எனும் மாயையை இது பொய்யாக்கியுள்ளது.
இந்து சமுத்திரத்தின் பெயர் வெளியிடப்படாத பகுதியில் இச்சோதனை நேற்று இடம்பெற்றது.
இந்தியாவுடனான இராணுவச் சமநிலையை பேண இது பெரிதும் உதவும் என்பதுடன், பாகிஸ்தானின் ராணுவ செயற்பாடுகளுக்கு பக்க பலமாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments