தங்கம் என்றால் என்ன? 22 கரட் மற்றும் 24 கரட் என்றால் என்ன?
*தங்கம் என்பது*
தங்கம் என்பது மஞ்சள் நிறமுள்ள ஒரு உலோகம். இதனை ஆரம்பகாலங்களில் நாணயமாக பயன்படுத்தப்பட்டது. காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை மற்றும் வெப்பத்தினையும் மின்சாரத்தினையும் கடந்தும் தன்மையுள்ளதால் தங்கத்தில் துறுப்பிடிப்பதில்லை. தங்கம் 24 கரட்டில் இருந்து 9. கரட் வரை சந்ததையில் காணப்படுகின்றது. இதில் 24 கரட் 100 சதவீதம் தங்கமாகும் இதனை பிஸ்கட் மூலம் விற்பனை செய்ப்படுகின்றது.
22 கரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு மற்றும் வெள்ளி உலோகமும் கலந்து செய்யப்படும் ஆபரணங்கள் ஆகும். 18 கரட் தங்கம் என்பது 75 சதவீதம் தங்கமும் 25 சதவீதம் செம்பும்.வெள்ளியும் கலந்து செய்யப்படும் ஆபரணம் ஆகும். 14 கரட் என்பது 58.5 சதவீதம் தங்கமும் 41.5 சதவீதம் செம்பு, வெள்ளி கலந்த ஆபரணம் ஆகும். 9 கரட் தங்கம் என்பது 37.5 சதவீதம் தங்கமும் 62.5 சதவீதம் வெள்ளி. செம்பு கலந்த ஆபரணமாகும். தங்கத்திடன் செம்பு, வெள்ளி கலப்பு அதிகரித்தால் தங்கத்தின் பெறுமதி குறைவடையும்.
*மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் பெறுமதியினைப் பொறுத்து பணத்தின் வெளியீடுகள் நடைபெருகின்றன*
ஒரு நாட்டின் நாணயச் செலாவணியில் தங்கத்தின் வகிபாகம் மிக முக்கியமாகும் . மத்திய வங்கி தங்கத்தினை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு நாணயங்களை வெளியிடுகிறது. இதனால் தான் ஒரு நாட்டின் தங்கத்தின் இருப்பினை வைத்து அந் நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.
*தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது எவ்வாறு*
உலகில் முதலாவதாக 1919. செப்டம்பர்.12 ஆம் திகதி லண்டன் கோல்ட் மார்க்கெட் பிக்சிங் லிமிடெட் நிறுவனம் தங்கத்தின் விலையினை முதல் முதலாக உலக சந்தையில் முன்னணி வகித்த 5 வர்தகர்களுடன் ஒப்பந்தம் செய்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்தது. அதன் பிறகு உலகில் நடைபெற்ற போர் காரணமாக 1939 முதல் 1954 வரை லண்டன் கோல்டு மார்க்கெட் மூடப்பட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்வதும் நின்றது.
தங்கத்தின் விலை 1980 ஜனவரி 21 ஆம் திகதி முதல் முதலாக தங்கத்தின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்தது. இதன் பிறகு 2004 ஆண்டு உலகில் தங்க விற்பனையில் சிறந்து விளங்கிய லண்டன் 5 வர்தக நிருவனங்கள் போன் மூலம் கதைத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்தார்கள்.
தற்போது உலக சந்தை தங்கத்தின் விலையினை ஓன் லைன் மூலம் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியில் இருந்த 3.30 வரை தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்கின்றார்கள். இதனால் தினம் தினம் தங்கத்தின் விலை குறைந்தும் கூடியும் காணப்படுகின்றது.
*அண்மைக் காலங்களில் தங்கத்தின் விலை உயர்ந்ததற்கான காரணங்கள்*
அமெரிக்காவின் முறையற்ற பொருளாதாரக் கொள்கையால் அமெரிக்கா ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. இதன் காரணமாக டொலரின் பெருமதி ஒவ்வொரு நாளும் வீழ்சியடைந்து வந்தது இதனால் அமெரிக்காவின் டொலரினை கொள்முதல் செய்த நாடுகள். தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்தது. இதன் காரணமாக தங்கத்தின் தேவை மிக அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாகத்தான் அண்மையக் காலங்களில் தங்கத்தின் விலை அதிகாரித்துக் கொண்டு சென்றது.
சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வந்ததனால் தங்கத்தின் முதலீடு செய்வது பாதுகாப்பானது எனக் கருதப்பட்டதும். டொலரின் மதிப்பு குறைவடைந்து வந்ததனால் டொலரில் முதலீடு செய்யும்
தேவைகள் அதிகரித்து வருகின்ற போது தங்க உற்பத்தி அத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உயரவில்லை இந்த நிலையில் பல நாடுகள் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தமையும் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணமாக இருந்தது.
*தற்போது தங்கத்தின் விலை விழ்சியடையக் காரணம்*
அண்மையில் நிதி நெருக்கடியில் காணப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரமும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதாரம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் டொலருக்கு முதலீடுகளை தற்போது திருப்பி விடுவதால் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.
0 Comments