sireku


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான அப்துல்லா மகரூப் அவர்கள் கலந்து கொண்டிருந்த தம்பலாகம பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

தம்பலாகம பிரதேச சபை கட்டிட தொகுதியில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அப்பிரதேச அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் அங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதேசத்தில் உள்ள  குறைபாடுகளை கேட்டு அஅறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ள படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை தெளிவுபடுத்தினார்.