தம்பலகமம் முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா வீதி கௌரவ பா.உறுப்பினர் MS தௌபீக் அவர்களினால் தார் வீதியாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

இவ்வீதியினை மக்கள் பல்வேறு சிரமத்துடன் இதுவரை காலமும் பயன்படுத்தி வந்தனர்,  குண்டும் குழியுமான இவ்வீதியானது மழைக்காலங்களில் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரிக்கு செல்லும் மாணவர்களில் அதிகமானவர்கள் இவ்வீதியினையே பயன்படுத்தி வருகிறார்கள்.  இவ்வீதியினை தார் வீதியாக புணரமைப்பு செய்வதுக்கு முன்வந்துள பா.உறுப்பினர் MS தௌபீக் அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.