முள்ளிப்பொத்தானையில் பள்ளியில் தாக்குதல்.
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிப்பொத்தானை கிராமத்தில் 95ம் கட்டையில் உள்ள முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாயலுக்கு இன்று (15 )ஆம் திகதி இரவு கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனால் இப் பள்ளியின் கட்டிட கண்ணாடிக் கதவு ஜன்னல் என்பன உடைந்து சேதமாகியுள்ளது.
முள்ளிப் பொத்தானை ஹமிதியா நகர் (96) முற்சந்தியில் பௌத்த சிலைவைத்தல் முயற்சியினை பிரதேச மக்கள் தடை செய்தமைக்கான பின்புலமாக இருக்குமோ என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
0 Comments