டான் பிரியசாதை கைது செய்ய பொலிஸ்மா அதிபர் உதவிட்டுள்ளார்.
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் “டான் பிரியசாத்” என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் எனும் நபரை கைது செய்ய பொலிஸ்மா அதிபர் உதவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டு இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.
வாக்குமூலமொன்றை பதிவு செய்ய குறித்த நபரை இன்று கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்திருப்பதாகவும், இதன்போது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
0 Comments