ரவுப் ஹக்கீமின் நடவடிக்கையினால் புத்தர் சிலை வைத்தவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
கடந்த வாரம் இறக்காமம் மாணிக்கமடுவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரத்தில் உடனடியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்..
புத்தர் சிலை தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோருடன் தொடர் பேச்சு வார்த்தை நடாத்தி உடனடியாக புத்தர் சிலையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து சட்டவிரோதமாக சிலை வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்த போது உடனடியாக நீதி மன்றம் சென்று புத்தர் சிலையை அகற்றுமாறு அமைச்சர் ஹக்கீம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அமைச்சர் ஹக்கிமின் கோரிக்கையை ஏற்ற பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் முறைப்பாட்டுக்கு அமைய நீதி மன்றம் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்தவர்களுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் கருத்து தெரிவித்த போது சட்ட விரோதமாக புத்தர் சிலை வைத்து நாட்டில் இனமுறுகளை ஏற்படுத்த முனைந்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் நீதிமன்றம் சென்றோம் என்றார்.
0 Comments