sireku

ஐ.எஸ். அமைப்பின் உருவாக்கம் சி.ஐ.ஏயின் பங்களிப்புடனேயே இடம்பெற்றிருக்கிறது என அமெரிக்க உயர் மட்ட தகவல் தொடர்பாடல்களை ஆதாரங்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

1979ம் ஆண்டு முதல் ராஜதந்திர ரீதியில் பரிமாறிக்கொள்ளப்பட்ட 531,525 தகவல்கள் கோர்வையினை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், அவ்வாண்டில் சதாம் ஹுசைன் ஆட்சிபீடம் ஏறியது முதல், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அதற்கான அமெரிக்க திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

1978 முதல் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் போட்டி நடவடிக்கைகள் உட்பட, அமெரிக்க தலையீடுகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் தொடர்பிலும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் தீவிரவாதத்தைத் தூண்டி விடுவதற்கான சி.ஐ.ஏயின் செயற்பாடுகள் குறித்தும் தனது அறிக்கை மூலம் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் தற்போது அரசியல் புகலிடம் கோரிய நிலையிலும் தனது பணியைத் தொடரும் ஜுலியன் அசேன்ஜ் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.