sireku

மியன்மாரில் இனசுத்திகரிப்பு இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அங்குள்ள ரோஹங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்க பாதுகாப்பு தரப்பினர் கடுமையான வன்முறைகளைக் கையாள்கின்றனர்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம் சிறார்களும், ஆண்களும் படுகொலை செய்யப்படுவதுடன், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.

அரசாங்கம் திட்டமிட்டு இந்த இனசுத்திகரிப்பை மேற்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நன்றி கிரு நியூஸ்.