வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய கல்லறைகள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.

திருகோணமலை சேருவில பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது கருங்கற்களால் செய்யப்பட்ட கல்லறை காணப்படும் 2 பிரதேசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களத்தின் ஆய்வுகள் மற்றும் ஆவண காப்பக பிரிவால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ள.

இன்றைக்கு 3000 தொடக்கம் 6000 வரையான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள், இறந்த உறவினர்களை பாரிய கருங்கற்களினால் செய்யப்பட்ட கல்லறைகளில் அடக்கம் செய்துள்ளனர்.

இரண்டு ஏக்கர்கள் கொண்ட குறித்த பிரதேசத்தில் இதுவரை 15 கல்லறைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வரலாறு ஆரம்பிக்கப்படுவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்த கல்லறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களும் இறந்தவர்களுக்கான இறுதிக் கிரியைகளை நடத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மயானம் காணப்படும் பகுதியை தொல்பொருள் வனப்பகுதியாக அறிவிப்பதற்கான வர்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.