sireku

இன்று வேலையில்லாப் பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  2017ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்பிற்கான நிதியை ஒதுக்கும்படி  கோஷங்களை எழுப்பினர்.

தற்போது நாட்டில் பல வெற்றிடங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டினார்கள் அதன்படி
ஆசிரியர் வெற்றிடம்  32000
தகவல் அறியும் உய்தியோகத்தர் வெற்றிடம் 8000
அபிவிருத்தி உத்தியோத்தர் வெற்றிடம்  10000.

இருப்பினும் 2012ம் ஆண்டில் இருந்து 2016ம் வரைக்கும் 30000 ம் வேலையில்லாப் பட்டதாரிகள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டனர்  .

அனைவரும் உடன் வேலை வழங்கு , வயதெல்லையினை 45தாக அதிகரி, அரசியல் தலையீடுகள் இன்றி வேலை வழக்கு, வருடம்தோறும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தை உருவாக்கு போன்ற சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.