TCQ வினால் தம்பலகாம பட்டதாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது ! (படங்கள் இணைப்பு)
பட்டதாரிகளையும் பட்டதாரிகளுள் சாதனையாளர்களையும் கெளரவிக்கும் மாபெரும் கெளரவிப்பு விழா இன்று முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
கத்தார் வாழ் தம்பலகாம சமூகத்தின் (TCQ) ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் தம்பலகாம முஸ்லிம் பட்டதாரிகள் அனைவரும் கெளரவிக்கப்பட்டனர்.
தம்பலகாமத்தில் முதலில் பட்டம் பெற்ற பட்டதாரி முதல் இன்று வரையில் உள்ள பட்டதாரிகள்வரை அனைவரையும் இவ்விழாவிற்காக அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்களது சொந்த ஊரில் தங்களுக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பட்டதாரிகளை கெளரவப்படுத்திய இவ்விழா மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இவ்விழாவினை சிறப்பாக நடத்திய கத்தார் வாழ் தம்பலகாம சமூக அமைப்பிற்கு (TCQ) வாழ்த்துக்கள்.
0 Comments