sireku


கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு, அடுத்த வருடம் முதல் உயர் தரத்தில் கற்கும் வாய்ப்பை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர், அகில விராஜ் காரியவசம் தெரிவித்ததாவது,

"2018 ஆம் ஆண்டு முதல் சாதாரண தரத்தில் கற்ற பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் உயர்தரத்தில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டவுள்ளது. 

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், அவர்களின் திறமைக்கு அமைய, கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளைத் தெரிவு செய்ய முடியும். அதனைப்போன்று சித்தியடையாத மாணவர்களுக்கும் அவர்களின் திறமைக்கு அமைய, கலைப் பிரிவிலோ அல்லது தொழில்நுட்பப் பிரிவிலோ அல்லது வெவ்வேறு பிரிவுகளிலோ கற்பதற்கான சந்தர்ப்பத்தை பெரும்பாலான முன்னேற்றமடைந்த நாடுகளில் உள்ளதைப்போன்று நாம் ஏற்படுத்திக் கொடுப்போம். அந்த மாணவர்களை நாம் தட்டிவிட மாட்டோம். 

நாம் இந்த வெட்டுப்புள்ளிகளைக் குறைப்பதற்கு எண்ணியுள்ளோம். அத்துடன், புதிதாக 24 பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன."


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...